கூட்ட நெரிசலில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் மரணம் – சிங்கப்பூரர்கள் யாரும் பாதிக்கப்பட்டனரா?

South Korea stampede singapore reports
AFP

சியோலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் சிங்கப்பூரர்கள் குறித்து தற்போது எந்த தகவலும் இல்லை என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் (MFA) ஞாயிற்றுக்கிழமை (அக் 30) ​​இரவு தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு ஹாலோவீன் கொண்டாட்டத்தின்போது கூட்டம் நெரிசலில் சிக்கி குறைந்தது 153 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

மோசமான வானிலை… திருப்பிவிடப்பட்ட ஸ்கூட் – பயணிகள் கடும் அவதி

இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோலுக்கு கடிதம் மூலம் தனது இரங்கலையும் தெரிவித்தார்.

ஹாலோவீன் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைப் பற்றி கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்ததாக திரு லீ தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

சியோலில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் உள்ளூர் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக MFA தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரர்களுக்கு உதவி தேவைப்பட்டால் தூதரகத்தை நாடும்படியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.