காதல் பெயரில் மோசடி செய்யும் கும்பல் – சிக்கிய நால்வர்

spore-police-arrest-love-scam-syndicate
Photo: Singapore Police Force

சட்டத்திற்கு புறம்பான பண பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பான சந்தேகத்தில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்கள் 32 முதல் 51 வயதுக்குட்பட்ட இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

iPhone 15 மாடல்களை வாங்க முதல் நாளே நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் – கொட்டும் மழையிலும் அசராத கூட்டம்

அவர்கள் அனைவரும் காதல் மோசடிகளிலும் ஈடுபட்டதாகவும் நம்பப்படுகிறது.

அவர்கள் கைது செய்யப்பட்டதால் குறைந்தபட்சம் S$115,000 பண இழப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மோசடி கும்பலிடம் இருந்து மின்னணு சாதனங்களை போலீசார் கைப்பற்றினர்.

அதோடு சேர்த்து S$80,600 பணத்தையும் அவர்கள் மீட்டனர்.

கைது செய்யப்பட்ட நால்வரில், 51 வயதான ஆண் மற்றும் 50 வயதுடைய பெண் மீது இன்று செப்.23 ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.

சிக்கன் ரைஸ், கோழி கறி, முட்டை வெறும் S$0.20 மட்டும் – இரு தினங்களுக்கு மட்டுமே ஆஃபர்