iPhone 15 மாடல்களை வாங்க முதல் நாளே நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் – கொட்டும் மழையிலும் அசராத கூட்டம்

iPhone 15 sales singapore orchard
Min-Wei & @khoingong

சிங்கப்பூரில் புதிய ஆப்பிள் iPhone 15 மாடல்கள் செப்டம்பர் 22 வெள்ளிக்கிழமை விற்பனைக்கு வந்தன.

இந்நிலையில், சிங்கப்பூரில் புதிய iPhone 15 மாடல்களை வாங்க முதல் நாளே (செப். 21) வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காணப்பட்டனர்.

சிக்கன் ரைஸ், கோழி கறி, முட்டை வெறும் S$0.20 மட்டும் – இரு தினங்களுக்கு மட்டுமே ஆஃபர்

அதாவது, ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள ஆப்பிள் ஸ்டோருக்கு வெளியேயும், தி ஹீரனில் உள்ள கோர்ட்ஸ் கடைக்கு வெளியேயும் ஐபோன் பிரியர்கள் நீண்ட வரிசையில் காணப்பட்டனர்.

செப். 21 அன்று வியாழன் மாலை 4:30 மணிக்கே நூற்றுக்கணக்கான ஐபோன் பிரியர்கள் காத்திருக்கத் தொடங்கியதாக கூறப்பட்டுள்ளது.

இரவு 8 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது, ஆனாலும் வரிசையில் நின்ற அவர்கள் அதனை பொருட்படுத்தவில்லை.

வெளிநாடுகளில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளும் வரிசையில் காத்திருந்ததாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெளியான புதிய ஆப்பிள் iPhone 15 மாடல்களின் விலை பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வெளியானது iPhone 15 மாடல்: முன்பதிவு, கடைகளில் எப்போது கிடைக்கும், விலை என்ன? – முழுத் தொகுப்பு

லாரி மீது மரம் விழுந்து கடும் விபத்து விபத்து.. பயணம் செய்த 3 பேர் நிலை என்ன என்று தெரியவில்லை