“தன் மரணத்துக்கு பின்னர் S$20 மில்லியன் சொத்தும் ஏழைகளுக்கு..”- 10 தொண்டு அமைப்புகளுக்கு பகிர்ந்த சிங்கப்பூரர்

loh-kiong-poot-donate-20-million-will
Photo: 8world

79 வயதான ஓய்வு பெற்ற முதியவர் ஒருவர் தன்னுடைய மரணத்துக்கு பின்னர் சுமார் S$20 மில்லியன் சொத்துக்களை நன்கொடையாக வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

அந்த சொத்துக்களை 10 தொண்டு அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்குவேன் என அவர் உறுதிப்பட கூறியுள்ளார்.

கட்டுமான தளத்தில் கண்டெடுக்கப்பட்ட மற்றொரு போர்க்கால வெடிகுண்டு.. கட்டுமான ஊழியர்கள் வெளியேற்றம்

சிங்கப்பூர் தொழிலதிபர் லோ கியோங் பூட் என்ற அவர் தனது 47 வயதில் ஓய்வு பெற்றார்.

மேலும், அவர் தனது 50 வயதில் சொத்துக்களை பிரித்து உயில் எழுதினார், அதில் 10 தொண்டு அமைப்புகளுக்கு சொத்தை வழங்குவது குறித்து முன்பதிவு செய்தார்.

லோ தனது மூன்று குழந்தைகளும் சுதந்திரமாக வாழ போதுமான சொத்துக்கள் இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதாவது அவர் சொத்துக்களில் சிலவற்றை அவர்களுக்காக விட்டுவிடுகிறேன் என்றார். தன் மனைவியும் சேர்த்து தான் என்றார்.

சிங்கப்பூரரின் இந்த உயரிய உள்ளம் அனைவரின் பாராட்டையும், வியப்பையும் பெற்று வருகிறது.

“கைப்படாத பிரெஷ் உணவு, தயங்காம எடுத்துக்கோங்க” – உணவை வீணாக்காமல் பெஞ்சில் வைத்துச்சென்ற ஊழியர்