Singapore TOTO முதல் பரிசு வெற்றியாளர் இல்லை.. 2 ஆம் பரிசுடன் சேர்த்து முதல் பரிசையும் தட்டி சென்ற 12 பேர்

feb-2024-toto-reunion-draw

Singapore TOTO குரூப் 1இல் யாரும் வெற்றி பெறாத காரணத்தால் இரண்டாம் பரிசு வென்றவர்களுக்கு பெரும் அதிஷ்டம் அடித்துள்ளது.

கடந்த ஜூன் 29 அன்று நடந்த டோட்டோ டிராவிற்கான ஜாக்பாட் முதல் பரிசு S$11.6 மில்லியன் ஆகும்.

ஓட்டுனர்களுக்கு சம்பளம் உயர்வு – S$2,200 to S$3,200… ஜூலை முதல் அமல்

முதல் பரிசுக்கான வெற்றியாளர்கள் யாரும் இல்லை என்ற காரணத்தால், குரூப் 1 முதல் பரிசு மற்றும் குரூப் 2 இரண்டாம் பரிசு ஆகியவை 12 பேருக்கும் பிரித்து கொடுக்கப்படும் என்ற அசத்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது குரூப் இரண்டில் ஒவ்வொரு நபருக்கும் S$1,074,777 என்ற பரிசு பகிர்ந்து கொடுக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

வெற்றி பெற்ற 12 பேரில் இரண்டு பேர் iToto குலுக்கலில் தேர்வாகியுள்ளார். இந்த முறையில் 28 பேர் குழுவாக டிக்கெட் வாங்குவார்கள், டிக்கெட் ஒவ்வொன்றும் S$33க்கு தனித்தனியாக விற்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் வெற்றி தொகை 28 பேருக்கும் சரிசமமாக பிரித்து கொடுக்கப்படும்.

மேலும் QuickPick System 8 entry இல் ஒருவர், QuickPick System 7 entries இல் இருவர், QuickPick Ordinary entries இல் ஐந்து பேர் மற்றும் System 8 entries இல் இருவர் தேர்வு ஆகியுள்ளார்.

System 8 entry இன் டிக்கெட் கட்டணம் S$28, System 7 இன் டிக்கெட் கட்டணம் S$7, மேலும் Ordinary டிக்கெட் கட்டணம் S$1 க்கும் விறக்கப்படுகிறது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

தேக்கா நிலையம் மூடல்… ஜூலை முதல் இயங்காது – காரணம் என்ன ?