போர்ச்சுகலில் நடந்த அயர்ன்மேன் பந்தய போட்டிகளில் பங்கேற்ற சிங்கப்பூரர் மரணம்

sporean-man-passes-away-portugal-ironman
IRONMAN Portugal/Facebook

போர்ச்சுகல் நாட்டில் நடந்த அயர்ன்மேன் (Ironman) 70.3 பந்தயத்தில் பங்கேற்ற சிங்கப்பூரர் ஒருவர் உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

போர்ச்சுகலில் உள்ள காஸ்காய்ஸ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட மும்முனை போட்டிகள் 1.9 கிமீ நீச்சல், 90 கிமீ பைக் ஓட்டம் மற்றும் 21.1 கிமீ ஓட்டப்பந்தயம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

பயன்படுத்திய உள்ளாடைகளை அசல் வியர்வை வாசனையுடன் விற்கும் இளம்பெண்… அதற்கும் தேவை அதிகம் – முன்பதிவு அவசியமாம்

கடந்த அக். 15 அன்று நடந்த பந்தயத்தின் நீச்சல் போட்டியின்போது தடகள வீரரான அவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது என்றும், பின்னர் உதவி வழங்கப்பட்டது என்றும் பந்தய அமைப்பாளர் IRONMAN போர்ச்சுகல் தெரிவித்தார்.

அங்கே சிறந்த மருத்துவ ஏற்பாடுகள் இருந்தபோதிலும், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்சில் உயிரிழந்தார் என்று சொல்லப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதாகவும், அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவை வழங்குவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர் டெரிக் டீ ஹுய் ஷெங் (Derrick Tee Hui Sheng) என்ற 36 வயதான சிங்கப்பூர் ஆடவர் என்று Zaobao தெரிவித்துள்ளது.

18 முதல் 49 வயதுடையவர்கள் ரெடியா.. உங்களுக்கும் கூடுதல் டோஸ் தடுப்பூசி