ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், ஸ்ரீ துர்க்கை சுமங்கலி பூஜை!

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், ஸ்ரீ துர்க்கை சுமங்கலி பூஜை!
File Photo

 

வரும் ஜூன் 2- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் (Sri Vairavimada Kaliamman Temple) ஸ்ரீ துர்க்கை சுமங்கலி பூஜை நடைபெறும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board- ‘HEB’) அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் ஆலோசனை!

ஜூன் 2- ஆம் தேதி அன்று காலை 08.05 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், காலை 08.30 மணிக்கு துர்கா சூக்தம், வேதபாராயணம், ஹோமமும், காலை 09.00 மணிக்கு பூர்ணாஹூதி, தீபாராதனையும், காலை 09.15 மணிக்கு ஸ்ரீ துர்க்கை அம்மன் சிறப்பு அபிஷேகமும், பால்குட அபிஷேகமும், காலை 09.45 மணிக்கு கட புறப்பாடும், காலை 10.45 மணிக்கு சுமங்கலி பூஜையும், மதியம் 12.15 மணிக்கு மஹா தீபாராதனையும், அன்னதானமும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் இட்லி கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…. செல்ஃபி எடுக்க குவிந்த மக்கள்!

சுமங்கலி பூஜையில் பக்தர்கள் கலந்து கொள்ளலாம். இதற்கான சீட்டுகளை கோயில் அலுவலகத்தில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, 62595238 என்ற தொலைபேசி எண்ணில் கோயில் அலுவலகத்தைத் தொடர்புக் கொள்ளலாம். இவ்வாறு இந்து அறக்கட்டளை வாரியம் தனது இணைய தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.