அடுத்தாண்டு பிப்ரவரி 12- ஆம் தேதி ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

Photo: Sri Mariamman Temple

சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று ஸ்ரீ மாரியம்மன் கோயில் (Sri Mariamman Temple). இக்கோயில் 244 சவுத் பிரிட்ஜ் சாலையில் (244 South Bridge Road) அமைந்துள்ளது. நாள்தோறும் 100- க்கும் அதிகமான பக்தர்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

வெளிநாட்டு ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்காமல் இருப்பது ஏன்? – சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் நாளை விவாதம்

விஷேச நாட்களில் சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. இக்கோயில் நிர்வாகம் இந்து அறக்கட்டளை வாரியத்தின் (Hindu Endowments Board) கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “ஆகம விதிப்படி, ஒவ்வொரு கோயில்களிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 12- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்கான கோயில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

வெளிநாட்டு ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்காமல் இருப்பது ஏன்? – சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் நாளை விவாதம்

இந்த நிலையில், ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் வரும் நவம்பர் 7- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று காலை 06.00 மணி முதல் 07.30 மணி வரை மூலஸ்தானம் (Moolasthanam) மற்றும் பரிவார பாலஸ்தாபனம் (Parivara Balasthapanam) ஆராதனைகள் நடைபெறும். நவம்பர் 4- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று முதல் நவம்பர் 7- ஆம் தேதி திங்கள்கிழமை வரை நடைபெறவுள்ள பல்வேறு பிரார்த்தனைகளைக் காண பக்தர்கள் வரவேற்கப்படுகின்றன.

கோயில் நடைபெறவுள்ள நிகழ்வுகள் அனைத்தும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் என்ற அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்திலும், என்ற ஃபேஸ்புக் பக்கத்திலும் நேரலை ஒளிபரப்பு செய்யப்படும். இந்த நாட்களில் அர்ச்சனைகளும், சேவைகளும் கிடையாது.

‘World One Health Congress’ மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக சிங்கப்பூர் வந்துள்ள தமிழக அமைச்சர்!

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு கோயில் அலுவலகத்தின் 62234064 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.