‘ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்; பேருந்து சேவையில் மாற்றம்’- எஸ்எம்ஆர்டி நிறுவனம் அறிவிப்பு!

Photo: SMRT

சிங்கப்பூரில் உள்ள சவுத் பிரிட்ஜ் சாலையில் (South Bridge Road) அமைந்துள்ளது பிரசித்திப் பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோயில் (Sri Mariamman Temple). இந்த கோயிலில் வரும் பிப்ரவரி 12- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கவுள்ளனர்.

பிப்.14- ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார் சிங்கப்பூர் நிதியமைச்சர் லாரன்ஸ் வோங்!

இந்த நிலையில், ஸ்ரீ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பேருந்து சேவையில் மாற்றம் தொடர்பான முக்கிய அறிவிப்பை எஸ்எம்ஆர்டி வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் பிப்ரவரி 11- ஆம் தேதி இரவு 11.00 PM மணியில் இருந்து பிப்ரவரி 12- ஆம் தேதி மாலை 06.00 PM மணி வரை எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் (SMRT) பேருந்து சேவை எண் 61 சில பேருந்து நிறுத்தங்களைத் தவிர்க்கும்.

நீல் சாலையில் (Neil Rd) உள்ள மேக்ஸ்வேல் நிலைய வெளிவழி 3- க்கு எதிரில் (Opp Maxwell Stn Exit 3), ‘தி பின்னக்கில் அட் டக்ஸ்டனுக்கு’ முன்னால் (Bef The Pinnacle @Duxton), சவுத் பிரிட்ஜ் சாலையில் (South Bridge Rd) உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு எதிரில் (Opp Sri Mariamman Tp) மூன்று பேருந்து நிறுத்தங்களில் நிற்காமல் செல்லும் என எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மலேசியாவில் களைகட்டியது தைப்பூசத் திருவிழா… அலகு குத்தியும், காவடி எடுத்தும் பத்துமலை முருகன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!

இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் சேவை மையத்தில் 1800-336-8900 என்ற தொலைபேசி எண்ணை (காலை 07.30 AM மணி முதல் இரவு 08.00 PM மணி வரை) தொடர்புக் கொள்ளலாம் (அல்லது) https://www.smrt.com.sg/ என்ற எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.