ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஸ்ரீ திரௌபதை அம்மன் பிரார்த்தனை பூஜை ஹோமம்!

Photo: Sri Mariamman Temple

சிங்கப்பூரில் உள்ள கோயில்களில் மிகவும் பிரசித்திப் பெற்றது ஸ்ரீ மாரியம்மன் கோயில். இக்கோயில் 244 சவுத் பிரிட்ஜ் சாலையில் (244 South Bridge Road) அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு நாள்தோறும் 100- க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். விஷேச நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. இக்கோயில் நிர்வாகம் இந்து அறக்கட்டளை வாரியத்தின் கீழ் உள்ளது.

தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இரவு விருந்தளித்த அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்!

இந்த நிலையில், இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஜூலை 6- ஆம் தேதி முதல் ஜூலை 10- ஆம் தேதி வரை ஸ்ரீ திரௌபதை அம்மன் பிரார்த்தனை பூஜை ஹோமம் (Sri Drowpathai Amman Prarthanai Poojai Homam) நடைபெறுகிறது. இந்த நாட்களில் பக்தர்கள் காலை 08.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையும், இரவு 07.00 மணி முதல் 07.30 மணி வரையும்11 சிங்கப்பூர் டாலரைக் கட்டணமாக செலுத்தி திரவிய ஹோம தட்டை (Dhrivya homa thattu) வாங்கி கோயிலில் வழங்கலாம்.

ஜி20 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக இந்தோனேசியா சென்றுள்ள அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்!

ஜூலை 10- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09.30 மணி முதல் 5 சிங்கப்பூர் டாலரைக் கட்டணமாக செலுத்தி மஞ்சள்குடம் ரசீதுகளை கோயில் அலுவலகத்திலோ (அல்லது)  http://smt.org.sg/என்ற இணையதளப் பக்கத்திலோ சென்று பெற்றுக் கொள்ளலாம். இது தொடர்பான, கூடுதல் விவரங்களுக்கு கோயில் நிர்வாகத்தில் 62234064 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.