தீமிதி திருவிழா: ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் வெள்ளி தேரோட்டம்!

Photo: Hindu Endowments Board Official Facebook Page

சிங்கப்பூரில் மிகவும் பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று ஸ்ரீ மாரியம்மன் கோயில் (Sri Mariamman Temple). இந்த கோயில் சிங்கப்பூரில் உள்ள சவுத் பிரிட்ஜ் சாலையில் (South Bridge Road) அமைந்துள்ளது. நாள்தோறும் 100- க்கும் மேற்பட்ட பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும், இந்த கோயிலில் விஷேச நாட்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடத்தப்படுகிறது.

‘இந்தியாவின் மேலும் ஒரு நகரத்தில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை’- விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு!

ஆண்டுதோறும் நடைபெற்று வரும், ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் தீமிதி திருவிழா (Fire Walking 2022), நடப்பாண்டு வரும் அக்டோபர் 16- ஆம் தேதி அன்று நடைபெறும் என்று ஸ்ரீ மாரியம்மன் கோயில் நிர்வாகம் மற்றும் இந்து அறக்கட்டளை வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. தீமிதி திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்.

தீமிதி திருவிழாவையொட்டி, கோயிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக, வெள்ளி தேரோட்டம் அக்டோபர் 14- ஆம் தேதி அன்று இரவு 09.00 மணிக்கு நடைபெற்றது. சாலையில் வலம் வந்த வெள்ளி தேரை, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் உள்ளிட்டோர் வழிபட்டனர். தெலோக் பிளாங்கா (Telok Blangah Rise) என்ற இடத்தில் வெள்ளி தேரோட்டம் தொடங்கிய நிலையில், மீண்டும் ஸ்ரீ மாரியம்மன் கோயிலை வந்தடைந்தது.

சுவிட்சர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்!

தேரோட்டம் முழுவதும் இந்து அறக்கட்டளை வாரியம் மற்றும் கோயில் நிர்வாகம் உள்ளிட்டவற்றின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளப் பக்கங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதேபோல், அடுத்ததடுத்த தினங்களில் நடைபெற நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.