ஸ்ரீ ராமர் கோயிலில் பட்டாபிஷேகம்- ஸ்வர்ணாபிஷேகம் விழா கோலாகலம்!

ஸ்ரீ ராமர் கோயிலில் பட்டாபிஷேகம்- ஸ்வர்ணாபிஷேகம் விழா கோலாகலம்!
Photo: Sri Ramar Temple

 

சிங்கப்பூரில் உள்ள 51 சாங்கி வில்லேஜ் சாலையில் (Changi Village Road) அமைந்துள்ளது ஸ்ரீ ராமர் கோயில் (Sree Ramar Temple). இந்த கோயிலில், கடந்த ஜூலை 8- ஆம் தேதி சனிக்கிழமை அன்று பட்டாபிஷேகம்- ஸ்வர்ணாபிஷேக விழா நடைபெற்றது. இந்தியாவில் பிரசித்திப் பெற்ற திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் நடைபெறுவது போல், வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ராமருக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இந்தியாவில் தங்கம் போல் எகிறும் தக்காளி விலை… சிங்கப்பூரில் பாதிப்பு இருக்குமா? – லிட்டில் இந்தியாவில் நிலை என்ன?

சிறப்பு அபிஷேகங்கள், ஹோமங்கள், கலாசாபிஷேகம் என ஆகம விதிப்படி அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அந்த வகையில், சுமார் 150 பொற்காசுகள் கொண்டு ஸ்ரீ ராமருக்கு ஸ்வர்ணாபிஷேகமும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, மேள வாத்தியங்கள் முழங்க ‘கோவிந்தா…. நாராயணா’ என்று பக்தர்கள் முழங்க, அலங்கரிக்கப்பட்ட ராமர் வலம் வந்தார்.

“உழைப்புக்கு ஏற்ற கூலி முக்கியம்ங்க..” – கடமைக்கு வேலை செய்யும் ஊழியர்கள் சிங்கப்பூரில் தான் அதிகமாம்

இந்த நிகழ்ச்சியில் சுமார் 200- க்கும் மேற்பட்டோருக்கு அறுசுவையுடன் கூடிய அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.