‘ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் மார்கழி மாத விநாயகர் சதுர்த்தி விழா- 2024’- பக்தர்களுக்கு அழைப்பு!

ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா!
Photo: Sri Senpaga Vinayagar Temple

 

சிங்கப்பூரில் உள்ள சிலோன் சாலையில் (Ceylon Road) அமைந்துள்ளது ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம் (Sri Senpaga Vinayagar Temple). இந்த ஆலயத்தில் நாளை (ஜன.14) ‘மார்கழி மாத விநாயகர் சதுர்த்தி விழா- 2024’ நடைபெறும் என்று ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களை குறைக்கும் திட்டம்.. மலேசியாவில் வேலை அனுமதியுடன் நிர்கதியாய் நிற்கும் ஊழியர்கள்

இது குறித்து ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஜனவரி 14- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 05.30 மணிக்கு விநாயகருக்கு சங்கல்ப்பமும், ஹோமமும், விசேட அபிஷேகமும், மாலை 07.00 மணிக்கு மூலஸ்தான விசேட பூஜையும், இரவு 07.30 மணிக்கு வசந்தமண்டபப் பூஜையும், விநாயகப் பெருமான் திருவீதி உலாவும், இரவு 09.00 மணிக்கு அர்த்தசாமப் பூஜையும், அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்படும்.

சிங்கப்பூரில் S$10,000 முதல் S$20,000 வரை மாத சம்பளம் வாங்கும் ஊழியர்கள் – என்னங்க சொல்றிங்க

இந்த பூஜையில் பக்த்ர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானைத் தரிசித்து, பிரசாதம் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.