ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் களைக்கட்டிய நவராத்திரி திருவிழா!

ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் களைக்கட்டிய நவராத்திரி திருவிழா!
Photo: Sri Senpaga Vinayagar Temple

 

சிங்கப்பூரின் சிலோன் சாலையில் உள்ள ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி திருவிழா களைக்கட்டியது. ஆலய வளாகத்தில் உற்சவ சிலைக்கு துர்க்கையம்மன் அலங்காரம் செய்யப்பட்டு, சரஸ்வதி, விநாயகர், கிருஷ்ணன், ராதை, விநாயகர் போன்ற கொலுக்கள் வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் களைக்கட்டிய நவராத்திரி திருவிழா!
Photo: Sri Senpaga Vinayagar Temple

நவராத்திரி திருவிழா சுமார் 10 நாட்கள் கொண்டாடப்படும் என்பதால், நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

லிட்டில் இந்தியாவிலுள்ள குடியிருப்பில் தீ.. 20 பேர் வெளியேற்றம் – ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

அத்துடன், ஆலய வளாகத்திலேயே மேடை அமைக்கப்பட்டு, பக்தி இன்னிசை நிகழ்ச்சிகளும், சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, சிறுமிகளின் பரதநாட்டியம் காண்போரை வெகுவாகக் கவர்ந்தது.

ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் களைக்கட்டிய நவராத்திரி திருவிழா!
Photo: Sri Senpaga Vinayagar Temple

ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் அமர்ந்து, நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்ததுடன், புகைப்படங்களையும் எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு இனி சிரமம் இருக்காது.. சட்டவிரோத லாரி சேவைக்கு குட்பை

ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் களைக்கட்டிய நவராத்திரி திருவிழா!
Photo: Sri Senpaga Vinayagar Templ

இதன் காரணமாக, ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி திருவிழா களைக்கட்டியுள்ளது. நாள்தோறும், இந்த கோயிலுக்கு 100- க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்துச் செல்கின்றனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.