‘ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை மாத விநாயகர் சதுர்த்தி பூஜை நடைபெறும்’ என அறிவிப்பு!

'ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை மாத விநாயகர் சதுர்த்தி பூஜை நடைபெறும்' என அறிவிப்பு!
Photo: Sri Senpaga Vinayagar Temple

 

சிங்கப்பூரில் உள்ள சிலோன் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம். இன்று (நவ.17) கார்த்திகை மாதம் 1- ஆம் தேதி பிறந்துள்ள நிலையில், கார்த்திகை மாத விநாயகர் சதுர்த்தி பூஜை, இந்த ஆலயத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மது அருந்தி வாகனம் ஓட்டி பிடிபட்ட 17 பேர்.. வாகனம் ஓட்டவும் தடை விதிக்கப்படலாம்

இன்று (நவ.17) மாலை 05.00 மணிக்கு சங்கல்பமும், ஹோமமும், மாலை 05.30 மணிக்கு விநாயகப் பெருமானுக்கு ஸ்நபனஅபிஷேகத்தைத் தொடர்ந்து, முருகப்பெருமானுக்கு கந்தரநுபூதி பாராயணத்துடன் அலங்கார ஸ்நபனஅபிஷேகம் நடைபெறும்.

சிங்கப்பூரில் கடையைத் திறந்த ‘Tim Hortons’ நிறுவனம்!

மாலை 06.30 மணிக்கு மூலஸ்தான விசேட பூஜையும், இரவு 07.00 மணிக்கு வசந்தமண்டபப்பூஜையும், அதைத் தொடர்ந்து, கந்த சஷ்டி கவச பாராயணமும், இரவு 08.15 மணிக்கு விநாயகப் பெருமான் திருவீதி உலாவும், இரவு 09.00 மணிக்கு அர்த்தசாமப்பூஜையும், அதைத் தொடர்ந்து பிரசாதமும் வழங்கப்படும். இந்த பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானின் அருளைப் பெறுமாறு ஆலய நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.