பிப்.28- ஆம் தேதி ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி பூஜை!

பிப்.28- ஆம் தேதி ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி பூஜை!
Photo: Sri Siva-Krishna Temple

 

சிங்கப்பூரில் உள்ள மார்சிலிங் ரிஷ் சாலையில் (Marsiling Rise Road) அமைந்துள்ளது ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயம் (Sri Siva Krishna Temple). இந்த ஆலயத்தில் உள்ள விநாயகருக்கு வரும் பிப்ரவரி 28- ஆம் தேதி மாசி மாத சங்கடஹர சதுர்த்தி பூஜை (Sankadahara Chathurthi Poojai) நடைபெறும் என்று ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூரை விட சிறந்த வேலை, குறைந்த வாழ்க்கைச் செலவுகள்.. ஆஸ்திரேலியாவுக்கு படையெடுக்கும் இந்திய, சிங்கப்பூர் மக்கள்

பிப்ரவரி 28- ஆம் தேதி புதன்கிழமை அன்று மாலை 06.00 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு ஹோமமும், அதைத் தொடர்ந்து அபிஷேகமும் நடைபெறவுள்ளது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் சிறப்பு அபிஷேக தட்டுக்கு 11 வெள்ளியும், உதிரி பூவுக்கு 1 வெள்ளியும், பால் பாக்கெட்டுக்கு 2 வெள்ளியும், ரோஜா மாலைக்கு 10 வெள்ளியும் ஆலயத்தில் செலுத்தி, அதனை பெற்றுக் கொண்டு விநாயகருக்கு செலுத்தலாம்.

சிங்கப்பூரில் “பொது எச்சரிக்கை ஒலி” – பிப்.15ம் தேதி அன்று முழு தற்காப்பு தினம்

பக்தர்கள் அனைவரும் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஆலய நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.