‘கிருஷ்ணர் ஆலயத்தில் இன்று ஸ்ரீ சிவ கிருஷ்ணர் சிறப்பு படையல் பூஜை நடைபெறும்’ என அறிவிப்பு!

'கிருஷ்ணர் ஆலயத்தில் இன்று ஸ்ரீ சிவ கிருஷ்ணர் சிறப்பு படையல் பூஜை நடைபெறும்' என அறிவிப்பு!
Google Image

 

சிங்கப்பூரின் மார்சிலிங் ரிஷ் சாலையில் (Marsiling Rise Road) அமைந்துள்ளது ஸ்ரீ சிவ கிருஷ்ணர் ஆலயம் (Sri Siva Krishna Temple). இந்த ஆலயத்தில் இன்று (பிப்.03) ஸ்ரீ சிவ கிருஷ்ணர் படையல் பூஜை (Sri Siva Krishna Special Padaiyal Pooja) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு வருகை தந்த 1.1 மில்லியன் இந்திய சுற்றுலா பயணிகள்

அதன்படி, இன்று காலை 10.30 மணிக்கு ஸ்ரீ சிவ கிருஷ்ணருக்கு ஸ்ரீ சிவ கிருஷ்ணர் சிறப்பு அபிஷேகமும், காலை 11.40 மணிக்கு சிறப்பு படையல் பூஜையும், நண்பகல் 12.05 மணிக்கு மஹா தீபாராதனையும், நண்பகல் 12.30 மணிக்கு பிரசாதம் வழங்குதலும் நடைபெறும். இந்த பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஆலய நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

18வது மாடியில் இருந்து கீழே விழுந்த வெளிநாட்டவர்.. மரத்தில் விழுந்து பரிதாப மரணம்

ஆலயத்தில் 1 வெள்ளியை செலுத்தி நெய் விளக்கையும், 2 வெள்ளியைச் செலுத்தி பாலையும், 11 வெள்ளியைச் செலுத்தி சிறப்பு அபிஷேகத் தட்டையும், 10 வெள்ளியைச் செலுத்தி ரோஜா மாலையையும் கிருஷ்ணருக்கு பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.