‘ஸ்ரீ சிவன் கோயிலில், ஆடி மாதத்தின் இரண்டாவது அமாவாசை கடைபிடிக்கப்படும்’ என அறிவிப்பு!

'ஸ்ரீ சிவன் கோயிலில், ஆடி மாதத்தின் இரண்டாவது அமாவாசை கடைபிடிக்கப்படும்' என அறிவிப்பு!
Photo: Sri Sivan Temple

 

இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூரில் உள்ள கெய்லாங் ஈஸ்ட் அவென்யூவில் அமைந்துள்ள ஸ்ரீ சிவன் கோயிலில் (Sri Sivan Temple), ஆடி அமாவாசை (Aadi Amavasai) (ஆடி மாதம் 31) வரும் ஆகஸ்ட் 16- ஆம் தேதி புதன்கிழமை அன்று கடைபிடிக்கப்படும்.

ஆசிய தடகளப் போட்டி- சிங்கப்பூருக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருகின்றன. இரண்டு அமாவாசைகள் வரும் சமயத்தில், இரண்டாவது அமாவாசையைக் கடைபிடிப்பதுதான் சாஸ்திரம் மற்றும் பஞ்சாங்கத்திலும் அவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதலால், பக்தர்கள் அனைவரும், ஆகஸ்ட் 16- ஆம் தேதி புதன்கிழமை அன்று ஆடி அமாவாசையை அனுசரித்து தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பூஜைகளை செய்துக் கொள்ளலாம்.

தர்ப்பணம் கொடுக்க விரும்பும் பக்தர்கள் கோயிலின் இணையப் பக்கத்தில் முன்பதிவு செய்வது அவசியமாகும். இணையம் வழி முன்பதிவு செய்யாமல், அந்நாளில் நேரடியாக கோயிலுக்கு வந்து தர்ப்பணம் சீட்டை வாங்க முடியாது. எனவே, https://bit.ly/aadiamavasai2023 என்ற இணையப் பக்கத்திற்கு சென்று ஜூலை 17- ஆம் தேதி முதல் முன்பதிவுச் செய்துக் கொள்ளலாம்.

பக்தர்களுக்கு ஒதுக்கப்பட்ட வழிபாட்டு நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன் கோயிலை சென்றடைந்தால் போதுமானது. கோயிலில் பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்ட பாதை வழியே நிற்காமல் தொடர்ந்து நடந்தவாறு வழிபாடு முடிந்ததும், கோயில் வளாகத்திலிருந்து புறப்படும்படி பக்தர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட Singapore PR – வீடியோக்களை வைத்து வளைத்துப்பிடித்த போலீஸ்

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, 67434566 என்ற கோயில் அலுவலகத்தின் தொலைபேசி எண்ணுக்கு தொடர்புக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.