ஸ்ரீ கந்தசஷ்டி திருவிழாவையொட்டி, சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ சிவன் கோயிலில் (Sri Sivan Temple) ஸ்ரீ கந்தசஷ்டி சிறப்புப் பூஜைகள் (Sri Skanda Sashti Prayers) வரும் நவம்பர் 13- ஆம் தேதி முதல் நவம்பர் 18- ஆம் தேதி வரை நடைபெறும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூரில் உள்ள 24 கெய்லாங் ஈஸ்ட் அவென்யூ- 2ல் (24 Geylang East Ave 2) அமைந்துள்ள ஸ்ரீ சிவன் கோயிலில் வரும் நவம்பர் 13- ஆம் தேதி முதல் நவம்பர் 18- ஆம் தேதி வரை ஸ்ரீ கந்தசஷ்டி சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.
நவ.10- ஆம் தேதி ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை நடைபெறும் என அறிவிப்பு!
ஸ்ரீ சிவன் கோயிலில் அமைந்துள்ள முருகனுக்கு மேற்கண்ட நாட்களில் நாள்தோறும் காலை 09.30 மணிக்கு அபிஷேகமும், காலை 10.15 மணிக்கு த்ரிசதி அர்ச்சனையும், காலை 10.45 மணிக்கு மஹா தீபாராதனையும், இரவு 07.15 மணிக்கு உபய பூஜையும் மற்றும் சுவாமி புறப்பாடும் நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.