‘ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், ஸ்ரீ கந்தசஷ்டி சிறப்பு பூஜைகள் நடைபெறும்’ என அறிவிப்பு!

'ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், ஸ்ரீ கந்தசஷ்டி சிறப்பு பூஜைகள் நடைபெறும்' என அறிவிப்பு!
Photo: HEB

 

சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் (Sri Vairavimada Kaliamman Temple) வரும் நவம்பர் 13- ஆம் தேதி முதல் நவம்பர் 18- ஆம் தேதி வரை ஸ்ரீ கந்தசஷ்டி சிறப்பு பூஜைகள் (Sri Skanda Sashti Prayers) நடைபெறும் என இந்து அறக்கட்டளை வாரியம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு அரிய வகை உயிரினங்கள் கடத்தல்!

இது தொடர்பாக, இந்து அறக்கட்டளை வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் உள்ள முருகன் சுவாமிக்கு ஸ்ரீ கந்தசஷ்டி திருவிழாவையொட்டி வரும் நவம்பர் 13- ஆம் தேதி முதல் நவம்பர் 18- ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் முருகனுக்கு காலை 08.45 மணிக்கு சிறப்புப் பூஜையும், காலை 09.00 மணிக்கு த்ரிசதி அர்ச்சனையும், காலை 09.30 மணிக்கு மஹா தீபாராதனையும், பிரசாதம் வழங்குதலும், மாலை 06.45 மணிக்கு சிறப்புப் பூஜையும், இரவு 07.00 மணிக்கு த்ரிசதி அர்ச்சனையும், இரவு 07.30 மணிக்கு மஹா தீபாராதனையும், பிரசாதம் வழங்குதலும் நடைபெறும்.

நவம்பர் 13- ஆம் தேதி முதல் நவம்பர் 18- ஆம் தேதி வரை, த்ரிசதி அர்ச்சனை, அபிஷேக பொருட்கள் மற்றும் தீபம் சம்ர்ப்பணம் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.

தீபாவளி பண்டிகையையொட்டி, லிட்டில் இந்தியாவில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 62595238 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தைத் தொடர்புக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.