இந்தோனேசியா நாட்டின் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, இந்தியாவுக்கு திரும்பும் வழியில் இந்திய பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங், சிங்கப்பூருக்கு வருகைத் தந்தார். அவருக்கு இந்திய தூதரக அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
சோதனையில் சிக்கிய 3 ஆடவர்கள் – தப்பிக்க முயன்றவரை வளைத்து பிடித்து அதிகாரிகள்
அதைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்றான செராங்கூன் சாலையில் (Serangoon Road) உள்ள ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலுக்கு (Sri Srinivasa Perumal Temple) சென்ற இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங்கிற்கு, கோயில் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

அதன் தொடர்ச்சியாக, ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாளை தரிசனம் செய்த இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பின்னர், கோயிலைச் சுற்றிப் பார்த்தார். அமைச்சருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் வெகு விமர்சையாக நடந்த சூரசம்ஹாரம்!
இது குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.