ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி!

Photo: Hindu Endowments Board Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் (Sri Srinivasa Perumal Temple). இந்த கோயில் செராங்கூன் சாலையில் (Serangoon Road) அமைந்துள்ளது. இக்கோயிலில் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகளும், சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம். இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வர்.

S$300 மதிப்புள்ள CDC வவுச்சர்கள் – இன்று (ஜன.3) முதல்…!

அந்த வகையில், ஜனவரி 2- ஆம் தேதி அன்று வைகுண்ட ஏகாதசியையொட்டி, ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் அதிகாலை 06.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். அதைத் தொடர்ந்து, சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. பின்னர், காலை 09.30 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பக்தர்கள் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை வீட்டில் இருந்தபடியே காணும் வகையில், இந்து அறக்கட்டளை வாரியம் மற்றும் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக், யூ-டியூப் போன்ற சமூக வலைத்தளப் பக்கங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

சில ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு: 2023 முதல் அமல் – லிஸ்ட்ல நீங்க இருக்கீங்களா செக் பண்ணுங்க ?

பக்தர்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கோயில் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்திருந்தது. ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியையொட்டி, பெருமாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நாளில் வழிபாட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இந்து அறக்கட்டளை வாரியம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.