ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் திருக்குட நன்னீராட்டு விழா!

ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் திருக்குட நன்னீராட்டு விழா!
Photo: Sri Thendayuthapani Temple

 

 

சிங்கப்பூரில் உள்ள மிகவும் பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில். சுமார் 165 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலில், கடந்த 2022- ஆம் ஆண்டு ஜூன் 9- ஆம் தேதி முதல் கோயில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்தது. இதன் காரணமாக, சிறப்பு வழிபாடுகள் நடைபெறாமல் இருந்தது. எனினும், கார்த்திகை, பிரதோஷம், தேய்பிறை அஷ்டம தினங்களில் பழ அர்ச்சனை மட்டும் நடைபெற்று வந்தது.

சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூ-வின் 100- வது பிறந்தநாள்- சிறப்பு நாணயத்தை வெளியிட்டது சிங்கப்பூர் நாணய வாரியம்!

புனரமைப்புப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், டேங்க் சாலையில் (Tank Road) அமைந்துள்ள ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில், வரும் ஜூன் 1- ஆம் தேதி வியாழன்கிழமை காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் திருக்குட நன்னீராட்டு நடைபெறவுள்ளது. இந்த விழாவில், சுமார் 15,000 பக்தர்கள் கலந்துக் கொள்வார்கள் என்பதால், அவருக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

முதியோர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக, ரிவர்வேலி சாலையில் உள்ள திறந்தவெளியில் பெரிய பந்தல் போடப்பட்டுள்ளது. 1,000 பக்தர்கள் அமர்ந்து உணவருந்தும் வகையில், அந்த பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பக்தர்களுக்கு உதவுவதற்காக 1,000 தொண்டூழியர்கள் பணியில் அமர்த்தப்படுவர்.

சிங்கப்பூருக்கு மலிவுக் கட்டணத்தில் சுற்றுலா…பயணிகளிடம் ரூபாய் 20 லட்சம் மோசடி!

திருக்குட நன்னீராட்டு விழாவைப் பக்தர்கள் சமூக வலைத்தளங்கள், இணைய வழியில் காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவில், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவிருக்கிறார். அதேபோல், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் விழாவில் பங்கேற்கவுள்ளனர்.