ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் பிரம்மோத்சவம்!

Photo: Sri Vairavimada Kaliamman Temple Official Website

சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற திருத்தலங்களில் ஒன்று ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் (Sri Vairavimada Kaliamman Temple). இக்கோயில் டோவா பயோஹ் லோரோங் 8- ல் (Toa Payoh Lorong 8) அமைந்துள்ளது. இந்த கோயிலில் நாள்தோறும் விஷேச பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. நாள்தோறும் 100- க்கும் மேற்பட்டோர் இக்கோயிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றன.

“அரசாங்கத்தின் மீது சிங்கப்பூரர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள் ” – சிங்கப்பூர் பிரதமர் லீ பேச்சு

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் ஏப்ரல் 6- ஆம் தேதி அன்று பிரம்மோத்சவம் தொடங்கியது. இவ்விழாவானது வரும் ஏப்ரல் 17- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நாட்களில் முழுமையாக கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்ட பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். ஏப்ரல் 7- ஆம் தேதி முதல் ஏப்ரல் 17- ஆம் தேதி வரை, பூர்ணாஹீதி தட்டு மற்றும் அபிஷேகப் பொருட்களை நேர்த்திக் கடனாக செலுத்த, தினமும் பக்தர்கள் கோயிலில் வாங்கிக் கொள்ளலாம்.

Pasir Ris -ல் நடத்தப்பட்ட ரமலான் கண்காட்சி இடைநிறுத்தம் – SFA எச்சரிக்கை

ஏப்ரல் 16- ஆம் தேதி அன்று காலை 10.30 மணி முதல், பால்குடம் செலுத்த விரும்புவோர் சீட்டுகளை கோயில் அலுவலகத்தில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். கோயிலில் தயாரித்து வைத்திருக்கும் பால்குடங்கள் மட்டுமே பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்த முடியும். கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும். இது தொடர்பான, கூடுதல் விவரங்களுக்கு 62595238 என்ற தொலைபேசி எண்ணில் கோயில் அலுவலகத்தைத் தொடர்புக் கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.