கொழும்பு மற்றும் சிங்கப்பூர் இடையே தினசரி விமான சேவை- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு!

Photo: Singapore Airlines Official Facebook Page

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து கொழும்புக்கும் தினசரி விமான சேவையை நேற்று (17/11/2021) முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (Singapore Airlines) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மரப்பலகைப் பெட்டிக்குள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள்… பறிமுதல் செய்த ‘ICA’ அதிகாரிகள்!

இந்த விமான சேவையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் A350- 900 (Airbus A350-900) என்ற விமானம் இயக்கப்பட்டுள்ளது. இவ்விமானமானது SQ469 என்ற பெயரில் கொழும்புவில் இருந்து சிங்கப்பூருக்கும், SQ468 என்ற பெயரில் சிங்கப்பூரில் இருந்து கொழும்புக்கும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இலங்கைக்கான பொது மேலாளர் கூறுகையில், “எங்கள் உலகளாவிய வலையமைப்பை பாதுகாப்பான மற்றும் அளவீடு செய்யப்பட்ட முறையில் தொடர்ந்து விரிவுபடுத்துவதால், கொழும்பு மற்றும் சிங்கப்பூர் இடையே தினசரி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது கூடுதல் பயணிகள் பயணம் மற்றும் விமான சரக்கு விருப்பங்களை வழங்கும்” எனத் தெரிவித்தார்.

சிங்கப்பூர், இந்தியா இடையே விமான சேவை- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், சிங்கப்பூர் அமைச்சருடன் சந்திப்பு!

40 வணிக வகுப்பு இருக்கைகள் (Business Class seats) மற்றும் 263 எகனாமி வகுப்பு இருக்கைகளுடன் (Economy Class seats), கொழும்பு மற்றும் சிங்கப்பூர் இடையே ஏர்பஸ் A350-900 விமானத்தை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் விமானத்தை இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு, சிங்கப்பூர் இடையேயான விமான சேவைக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் https://www.singaporeair.com/en_UK/dk/home#/book/bookflight என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அறிந்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு தொடங்கப்பட்டுள்ள விமான சேவை மூலம் சிங்கப்பூருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.