இறைச்சி, கடல் உணவுகளை குளிர்சாதனம் இல்லாமல் சேமித்த ஆன்லைன் நிறுவனத்திற்கு S$11,000 அபராதம்

Photo: SFA

ஆன்லைன் உணவுப்பொருள்கள் நிறுவனமான OurPasar Essentials, உரிமம் பெறாத குளிர்பான நிலையத்தில் இறைச்சி மற்றும் கடல் உணவுகளை சேமித்து வைத்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், குளிர்விப்பான் இல்லாமல் மூல இறைச்சியை சேமித்து வைத்ததற்காகவும் அந்நிறுவனத்திற்கு S$11,000 அபராதம் விதிக்கப்பட்டது.

“வெளிநாட்டு ஊழியர்கள் செய்யும் பங்களிப்பு, தியாகங்களை ஒப்புக்கொள்வது கூட கிடையாது” – சீ சூன்

அதன் நிர்வாக இயக்குனர், முஹம்மது ஷபீஸான் பின் சைக் அப்துல் காதர் மீது, குற்றத்தைத் தடுக்க தவறியதற்காக S$9,000 அபராதம் விதிக்கப்பட்டது.

சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) தனது செய்திக்குறிப்பில், அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் எந்த வித குளிர்சாதனமும் இல்லாமல், இறைச்சி மற்றும் கடல் உணவு பாக்கெட்டுகளை மேஜைகளில் கையாண்டது கண்டுபிடிக்கப்பட்டது, என்று கூறியுள்ளது.

அதே போல, வளாகத்திற்கு வெளியே உள்ள நடைபாதையில் கோழி இறக்கைகள் கொள்கலனில் வெளிப்படையாக காணப்பட்டது.

மேலும் விசாரணையில், நிறுவனம் உரிமம் பெறாத குளிர்பான இடத்தில் இறைச்சி மற்றும் கடல் உணவுகளை சேமித்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் சட்டவிரோதமாக சேமித்து வைத்திருந்த சுமார் 312 கிலோ இறைச்சி மற்றும் கடல் உணவுகளை அது கைப்பற்றியது. மேலும்,125 கிலோ குளிரூட்டப்படாத பசு மாட்டிறைச்சி மற்றும் கோழியையும் அது கைப்பற்றி அப்புறப்படுத்தியது.

கோவிட்-19 தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழப்பு