சிங்கப்பூர் பள்ளி மாணவி துன்புறுத்தல் விவகாரம்; மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை..!

Students responsible for bullying incident
Students responsible for bullying incident at Mee Toh School disciplined accordingly: Principal (Photo: Twitter/@4YSLZ)

மீ தோ பள்ளியில் சமீபத்தில் நடந்த மாணவி துன்புறுத்தல் சம்பவத்தின் பின்னணியில் உள்ள மாணவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்கப்பட்டும், அவர்களுக்கு தகுந்த தண்டனையும் கொடுக்கப்பட்டுள்ளது என்று பள்ளியின் முதல்வர் திருமதி வாங்-டான் சன் சன் (மார்ச் 11) தெரிவித்தார்.

மேலும், அவர்கள் தங்கள் செயலுக்கு வருந்தியதாகவும் , பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பள்ளி மாணவி துன்புறுத்தல் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது – கல்வி அமைச்சர்..!

அவர் மேலும் கூறியதாவது: இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கு தகவல் கிடைத்த பின்னர், நாங்கள் விசாரணைகளைத் தொடங்கினோம். பள்ளியின் மூன்று வேலை நாட்களுக்குள் விசாரணைகள் முடிவடைந்து, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

மாணவர்களின் இந்த கொடுமையான செயல்கள், ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் விவரித்தார், மேலும் அவர்கள் பள்ளியின் நற்பெயருக்கு எதிராகச் செயல்களை மேற்கொண்டதாகவும் கூறினார்.

ஒரு மலாய் மாணவியை தேர்ந்தெடுத்து, அவரைப்பற்றி மோசமான குறிப்புகளை எழுதி, அந்த சக மாணவர்கள் செய்த இந்த செயல், மாணவியின் சகோதரி மூலம் ட்விட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

“அதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது” என்று கல்வி அமைச்சர் ஓங் யீ காங் கடந்த மார்ச் 10 அன்று தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் 7,000-க்கும் மேற்பட்டோருக்கு வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு..!