COVID-19: சிங்கப்பூரில் 7,000-க்கும் மேற்பட்டோருக்கு வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு..!

More than 7,000 Stay-Home Notices issued for COVID-19
More than 7,000 Stay-Home Notices issued for COVID-19; checks done through GPS, photos: ICA

சிங்கப்பூரில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) திங்கள்கிழமை (மார்ச் 9) காலை 8 மணி நிலவரப்படி சுமார் 7,000-க்கும் மேற்பட்ட வீட்டில் தங்கும் அறிவிப்புகளை (SHN) வெளியிட்டுள்ளது.

மேலும், அவர்கள் புகைப்படங்கள் மூலமாகவோ அல்லது தொலைபேசி ஜி.பி.எஸ் இருப்பிட செயல்பாடு மூலமாகவோ, இருக்கும் இடத்தை நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டியவை..!

பின்னர் அவர்கள் ஒரு மணி நேரத்திற்குள், அவர்களின் தொலைபேசியின் ஜிபிஎஸ் இருப்பிட சேவை மூலம் குறுஞ்செய்தியில் வழங்கப்பட்ட தனிப்பட்ட இணைய பக்க இணைப்பு வழியாக சென்று தங்கள் இருப்பிடத்தை அப்டேட் செய்ய வேண்டும்.

குறுஞ்செய்திகள் அல்லது தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காதவர்களுக்கு, “அவர்களைத் தொலைபேசியில் அழைத்தும், திடீரென்று வீட்டுக்குச் சென்றும் சோதனைகள் நடத்தப்படும் என்றும் ICA தெரிவித்துள்ளது.

தொலைபேசி அழைப்பைப் பெறுபவர்கள், அவர்கள் இருக்கும் இடத்தை சரிபார்க்க தங்கள் சுற்றுப்புறங்களின் புகைப்படங்களை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர்வாசிகள், நீண்டகாலத் தங்கும் அனுமதி, வேலை அனுமதி வைத்திருப்போருக்கு கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த உத்தரவின்படி, அவர்கள் 14 நாட்களுக்கு எல்லா நேரமும் வீட்டிலேயே இருக்கவேண்டும்.

இதையும் படிங்க : வணிகர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் செந்தோசாவிற்கு இலவச அனுமதி..!

#SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil