சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தேரை வழங்கிய சிங்கப்பூர் தொழிலதிபர்……தேரின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சிங்கப்பூர் தொழிலதிபர்
Video Crop Image

 

பட்டுக்கோட்டை அருகே உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு ரூபாய் 50 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட தேர் ஒன்றை சிங்கப்பூர் தொழிலதிபர் வழங்கியுள்ளார்.

லாரி, டாக்சி, கார் மோதி விபத்து: குழந்தை உட்பட 3 பேர் மருத்துவமனையில் அனுமதி

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள வெண்டாகோட்டை கிராமத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சுமார் 600 ஆண்டுகள் பழமையானது. அறநிலைக் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு நாள்தோறும் 500- க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பணிப்பெண்ணிடம் சில்மிஷம் செய்த வெளிநாட்டு ஊழியருக்கு சிறை

இந்த சூழலில், இக்கோயிலுக்கு சொந்தமாக திருத்தேர் இல்லாததை அறிந்த அதே கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் சிங்கப்பூரில் தொழில் செய்து வருகிறார். தனது சொந்த பணம் 50 லட்சம் ரூபாய் செலவில் மரத்தால் ஆன தேரைச் செய்து, சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வழங்கினார். சிங்கப்பூர் தொழிலதிபரை அக்கிராம மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.