‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவை’- மே முதல் ஆகஸ்ட் வரையிலான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

scoot-flight-diverted
Photo:Facebook/flyscoot

 

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமான ஸ்கூட் நிறுவனம் (Flyscoot), திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து தினசரி இரண்டு நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது.

சாப்பிட்டுக்கொண்டும், போன் பயன்படுத்தியும் பேருந்தை இயக்கிய ஓட்டுனர் – வீடியோ வைரலானதை அடுத்து சஸ்பெண்ட்

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு செல்ல 14,706 ரூபாயாக உள்ள நிலையில், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ரூபாய் 8,678 ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் இந்த விமான சேவையை பயணிகள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் மே மாதம் முதல் வரும் ஆகஸ்ட் வரையிலான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூரில் சுகி சிவம் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம்!

விமான பயண டிக்கெட் முன்பதிவு, பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://beta.makeabooking.flyscoot.com/ என்ற ஸ்கூட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.