கோடைக்கால விடுமுறை: திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ‘ஸ்கூட்’ விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

scoot-flight-diverted
Photo:Facebook/flyscoot

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமான ஸ்கூட் நிறுவனம் (Flyscoot), திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து தினசரி மற்றும் நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது.

தொழிலாளியின் திருமணத்துக்காக சிங்கப்பூரில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்த முதலாளி!

குறிப்பாக, சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வாரத்தில் அனைத்து நாட்களிலும் நாள்தோறும் இரண்டு விமான சேவைகளையும், திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு வாரத்தில் ஒரு சில நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் இரண்டு விமான சேவைகளையும் வழங்கி வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் கோடைக்கால விடுமுறை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், தங்களது குழந்தைகளுடன் வெளிநாடுகளுக்கு செல்ல இந்தியர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இதில், குறிப்பாக, பெரும்பாலானோர் சிங்கப்பூருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதனால், திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவைக்கான மார்ச் முதல் ஜூலை மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

UPI- PayNow இணைப்பால் ஏற்படும் நன்மைகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்!

விமான பயண டிக்கெட் முன்பதிவு, பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en என்ற ஸ்கூட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.