டெலிகிராமில் இந்த வேலையா…பிடிபட்டால் மரண தண்டனை கூட கிடைக்கும் – தற்போது பிடிபட்ட 32 பேர்

CNB

தீவு முழுவதும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படும் 32 பேர் கைது செய்யப்பட்டனர்.

டெலிகிராம் போன்ற அரட்டை செயலி மூலம் நடத்தப்படும் போதைப்பொருள் பரிவர்த்தனைகளை இலக்காகக் கொண்டு இந்த சோதனை நடைபெற்றது.

தவறான உறவு கொண்டதாக வெளிநாட்டவரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வெளிநாட்டு ஊழியருக்கு சிறை, 3 பிரம்படி!

இந்த நடவடிக்கை, கடந்த ஏப்ரல் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சுமார் S​​$140,000 மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இதில் டெலிகிராம் மூலமாக போதைப்பொருள் பரிவர்த்தனையில் ஈடுபட்ட சந்தேகத்தில் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதில், புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அருகே 26 வயது சிங்கப்பூரர் ஒருவரை CNB அதிகாரிகள் கைது செய்தனர்.

சிங்கப்பூரில் யாரேனும் 500 கிராமுக்கு மேல் கஞ்சா கடத்தி, பின்னர் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் கட்டாய மரண தண்டனையை சந்திக்க நேரிடும்.

பெண்ணை மானபங்கம் செய்த 40 வயது மதிக்கத்தக்க ஆடவர்… அதிரடியாக கைது செய்த போலீஸ் – காத்திருக்கும் பிரம்பு