வெளிநாடுகளில் உள்ள சிங்கப்பூரர்களின் கவனத்திற்கு… இம்மாத இறுதியில் ‘Vaccination channels’ நிறுத்தப்படும் என அறிவிப்பு!

Singapore visa free travel arrangement
Pic: REUTERS/Edgar Su

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகம் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகளவில் தற்போது கொரோனா தடுப்பூசி எளிதாகக் கிடைப்பதாலும், எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டுள்ளதாலும், வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர்களுக்கான (Overseas Singaporeans) கொரோனா தடுப்பூசித் திட்டங்களை (Vaccination channels) இம்மாதம் இறுதியுடன் நிறுத்தப்படுகிறது. எனவே, கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்து, சிங்கப்பூருக்கு வந்து தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளாதவர்கள், வரும் மார்ச் 31- ஆம் தேதிக்குள் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும்.

சிங்கப்பூரில் வெளிநாட்டு பணிப்பெண்ணின் பலே திட்டம்…சுற்றிவளைத்த போலீசார்…கம்பி என்னும் பரிதாபம்!

வெளிநாடுகளில் உள்ள சிங்கப்பூரர்கள் கொரோனா தடுப்பூசிகளைப் பெற சிங்கப்பூர் திரும்புவதற்கு வசதியாக, கடந்த 2021- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11- ஆம் தேதி அன்று ‘Vaccination Channels’ என்றழைக்கப்படும் தடுப்பூசித் திட்டங்களை சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியிருந்தது.

வெளிநாடுகளில் உள்ள சிங்கப்பூரர்களுக்கு, அவர்கள் வசிக்கும் பகுதிகளிலே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான அணுகல் மேம்பட்டுள்ளது. மேலும், கடந்த சில மாதங்களில் கொரோனா தடுப்பூசித் திட்டங்களுக்கான பதிவுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை நாங்கள் கவனித்தோம். கொரோனா தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திக் கொண்டவர்களுக்கான சிறப்பு பயணப் பாதைத் திட்டத்தை (Vaccinated Travel Lane- ‘VTL’) சிங்கப்பூர் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் பல நகரங்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

சாலைத் தடுப்பு மீது ஏறி சென்ற பேருந்து… கடும் போக்குவரத்து நெரிசல் – வாகனமோட்டிகள் பாதிப்பு

வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர்கள் முழுமையாக தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டிருந்தால், பூஸ்டர் தடுப்பூசியான கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள SHN அறிவிப்பை வழங்காமல் ‘VTL’ வழியாக சிங்கப்பூர் திரும்பலாம். பின்னர், பூஸ்டர் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளலாம். இவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

தடுப்பூசிப் போடாதவர்களுக்கான தனிமை காலம் ஏழு நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் இப்போது ஹோட்டல்களுக்கு பதிலாக, தாங்கள் விரும்பிய இடத்தில் (Stay-Home Notice- ‘SHN’) தனிமைப்படுத்திக் கொள்ளலாம். தடுப்பூசித் திட்டங்கள் நிறுத்தத்திற்கு பிறகு சிங்கப்பூருக்கு வரும் வெளிநாடு வாழ் சிங்கப்பூரர்கள் தங்களின் தனிமைக் காலத்தை முடித்துக் கொண்டு, ஏதாவது ஒரு தடுப்பூசி நிலையங்களுக்கு சென்று தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.