சிங்கப்பூரில் அதிபர் ஹலிமா யாகோப் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு..!

swearing-in of new Cabinet
Swearing-in of new Cabinet (Photo: TODAY)

சிங்கப்பூரில் பொதுத்தேர்தல் முடிந்த நிலையில், பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. இதில் 14வது நாடாளுமன்றத்தின் ஓர் அங்கமாக புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இஸ்தானா மற்றும் பாராளுமன்ற மாளிகை என இரு இடங்களில் 33 பேர் பதவியேற்றனர். இந்த பதவியேற்பு விழாவுக்கு அதிபர் ஹலிமா யாகோப் தலைமை தாங்கினார்.

இதையும் படிங்க : லிட்டில் இந்தியாவில் உள்ள தேக்கா சந்தை உள்ளிட்ட இடங்களுக்கு COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்தனர்.

இதில் துணை பிரதமர் ஹெங் சுவீ கியெட் உட்பட பலர் பாராளுமன்ற வளாகத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

முதலில் அதிபர் ஹலிமா யாக்கோப் உரை நிகழ்த்தி பதவியேற்பு விழாவை தொடங்கி வைத்தார். பின்னர், சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் பதவி ஏற்றுக்கொண்டார்.

அதன் பின்னர், துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து, இஸ்தானாவில் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

COVID-19 தொற்று காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

மூத்த துணை அமைச்சர்கள் 7 மற்றும் புதிய உறுப்பினர்கள் 7 பேர் இதில் பதவி ஏற்றுக்கொண்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்களாக புதிதாக 6 பேர் முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதையும் படிங்க : நான்கு மடங்கு வேகத்தில் COVID-19 சோதனை முடிவுகள் – சிங்கப்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg