லிட்டில் இந்தியாவில் உள்ள தேக்கா சந்தை உள்ளிட்ட இடங்களுக்கு COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்தனர்..!

Tekka Centre
Tekka Centre Google Street View

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியலில் புதிதாக சில இடங்களைச் சுகாதார அமைச்சகம் (MOH) சேர்த்துள்ளது.

புதிய இடங்களின் பட்டியலில், லிட்டில் இந்தியாவில் அமைந்துள்ள தேக்கா சந்தை, Funan மால் போன்ற இடங்களும் அடங்கும்.

இதையும் படிங்க : “மேம்பட்ட சிங்கப்பூரை உருவாக்குவதற்கான பணி என்றும் முடிவடைவதில்லை”- அமைச்சர் லாரன்ஸ் வோங்..!

மேலும்,

  • சிட்டி ஸ்குவேர் மால்
  • ஜூரோங்க் வெஸ்டில் உள்ள Pioneer மால்
  • முஸ்தஃபா சென்டர்
Source: MOH

அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அந்த இடங்களில் இருந்தவர்கள், அங்கு சென்றுவந்த நாளிலிருந்து 14 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் MOH கூறியுள்ளது.

துப்புரவு மற்றும் கிருமி நீக்கம் குறித்த வழிகாட்டுதல்களை வழங்க தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : நான்கு மடங்கு வேகத்தில் COVID-19 சோதனை முடிவுகள் – சிங்கப்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg