தைவானில் ரயில் தடம் புரண்ட விபத்தில் 48 பேர் மரணம் – சிங்கப்பூர் ஆழ்ந்த இரங்கல்

No reports of Singaporean casualties in Taiwan train derailment
(Photo: Xinhua/Zuma Press)

தைவானில் நேற்று (ஏப்ரல் 2) ரயில் தடம் புரண்ட சம்பவத்தில் சிங்கப்பூரர் யாரும் உயிரிழந்ததாக எந்த தகவலும் இல்லை என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகத்தின் (MFA) செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு தைவானில் சுரங்கப்பாதையில் தைப்பேவிலிருந்து சுமார் 490 பேருடன் தைதுங் சென்றுகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது.

சிங்கப்பூர் பயணிகள் விமானத்திற்கு தடை விதித்த நகரம்

குறைந்தது சுமார் 40 ஆண்டுகால வரலாற்றில் தீவின் மிக மோசமான இரயில் விபத்து இது ஆகும், அதில் குறைந்தது 48 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

தைவானின் ரயில் தடம் புரண்ட சம்பவத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புக்கு சிங்கப்பூர் அரசு வருத்தத்தை தெரிவித்துள்ளதாக MFA செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த சிங்கப்பூர் அரசு, காயமடைந்தவர்கள் விரைவாக குணமடையவும் வாழ்த்து கூறியுள்ளது.

போதைப்பொருள், போக்குவரத்து விதிமீறல் – தப்பியோடிய ஆடவர் கைது