COVID -19: வெளிநாட்டு ஊழியர்களின் நல்வாழ்வைக் கவனிப்பதற்கான சிங்கப்பூர் அரசின் விரிவான அணுகுமுறை..!

Comprehensive Approach to Take Care of Foreign Workers Living in Dormitories
Comprehensive Approach to Take Care of Foreign Workers Living in Dormitories

வெளிநாட்டு ஊழியர்களின் நல்வாழ்வைக் கவனிப்பதற்காக சிங்கப்பூர் அரசு விரிவான அணுகுமுறையை வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளுக்கு, நம்பிக்கை மற்றும் ஆதரவு வழங்கும் குழுக்கள் சுமார் 170-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு ஊழியர்களின் சுகாதாரத்தைக் கவனித்துக்கொள்வது:

  • வெளிநாட்டு ஊழியர்களின் தேவைகளுக்கு ஏற்ப கட்டப்பட்டுள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் மருத்துவ வசதிகள்
  • பொழுதுபோக்கு நிலையங்களில் மருத்துவச் சாவடிகள், மற்ற ஊழியர் தங்கும் விடுதிகளுக்கு சேவை வழங்க நடமாடும் மருத்துவக் குழுக்கள்
  • பாதிக்கப்பட்ட பெரும்பாலான தங்கும் விடுதிகளிலேயே சமூகப் பராமரிப்பு வசதிகள்
  • குணமடைந்த ஊழியர்களுக்கு சிறப்பாக ஒதுக்கப்பட்ட ப்ளாக்குகள்(BLOCK)

இதயம் படிங்க: அத்தியாவசிய பயணத்தை மீண்டும் தொடங்க 4 நாடுகளுடன் இணைந்து சிங்கப்பூர் செயல்படுகிறது..!

உணவு மற்றும் வசதிகள்:

  • உணவுப்பராமரிப்புப் பொட்டலங்கள், இணையத் தொடர்புகொண்ட SIM அட்டைகள், Wifi சேவைகள் மற்றும் இலவசத் திரைப்படங்கள்.

சம்பளம் மற்றும் பணம் அனுப்பும் சேவை:

  • முதலாளிகள் தவறாது குறிப்பிட்ட நேரத்தில் சம்பளம் வழங்குவதை மனிதவள அமைச்சு(MOM) உறுதிசெய்து வருகிறது.
  • வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் சேவைகள் வழங்கப்படுவது உறுதிசெய்யப்படுகிறது.

கூடுதல் விவரங்களுக்கு: go.gov.sg/MOM-1May

இதயம் படிங்க: சிங்கப்பூரில் உயிரிழந்த தமிழக பொறியாளரின் உடல் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டது..!