சிங்கப்பூரில் உயிரிழந்த தமிழக பொறியாளரின் உடல் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டது..!

Tamil Man death
Tamil Man death (Photo: Puthiya thalaimurai)

தமிழகத்தின் பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியைச் சேர்ந்த 39 வயதான செந்தில் குமார் சிங்கப்பூரில் கப்பல் பொறியாளராகப் பணியாற்றி வந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் செந்தில் குமார் தாயகம் சென்று விட்டு சிங்கப்பூருக்குத் திரும்பிய நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் இங்கு மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : KTP மருத்துவமனையில் இறந்த இந்திய ஊழியர் 11 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணிபுரிந்தவர்; ஒருவரின் வருமானத்தில் இயங்கிவந்த குடும்பம்..!

கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு பயணிகளுக்கான விமானச் சேவை இல்லாததால் அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல இயலாத நிலை ஏற்பட்டது.

இது குறித்து பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தரிடம் அவரது குடும்பத்தார் முறையிட்டனர்.

அதனையடுத்து, திரு பாரிவேந்தர் மத்திய அரசிடம் பேசி எடுத்த முயற்சிகளின் பலனாக, திரு செந்தில் குமாரின் உடல் சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு பெங்களூருக்கு சென்று சேர்ந்தது.

இரவு 11 மணிக்கு அங்கிருந்து அவசர சிகிச்சை வாகனம் மூலம் உடல் அவரது சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டது.

திரு செந்தில் குமார் உயிரிழந்து 13 நாட்களுக்குப் பிறகு அவரது உடல் சொந்த ஊருக்கு சென்று சேர்ந்ததாக தமிழக ஊடகம் புதிய தலைமுறை செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்கCOVID-19: சிங்கப்பூரில் மேலும் புதிதாக 447 பேர் கிருமித்தொற்றால் பாதிப்பு..!