சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மதுரைக்கு 412 ஊழியர்கள் வருகை..!

Madurai airport
(PHOTO: iamrenew)

இந்திய அரசால் இயக்கப்படும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் மதுரைக்கு சுமார் 412 ஊழியர்கள் வருகை தந்துள்ளனர்.

அவர்கள் சிங்கப்பூர், துபாயிலிருந்து வந்தவர்கள் என்றும் தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு புதிய நடைமுறை; நவம்பர் 17 முதல் அமல்.

கொரோனா கிருமித்தொற்று காரணமாக சர்வதேச விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டது.

அதனை பூத்திசெய்யும் விதமாக இந்த திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை அழைத்துவரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன்படி, சிங்கப்பூர், அமீரகம் போன்ற நாடுகளில் இருந்து ஊழியர்கள் இந்த விமானம் மூலம் இந்தியா வருகின்றனர்.

இதில் சிங்கப்பூரிலிருந்து 72 பேர் தனித்தனி விமானத்தில் மதுரை அழைத்து வரப்பட்டனர்.

அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, பின்னர் அவர்கள் தங்கள் சொந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சிங்கப்பூரிலிருந்து திருச்சிராப்பள்ளி செல்லும் விமானங்களின் அப்டேட்.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…