மீண்டும் முதல்ல இருந்தா… சிங்கப்பூரில் இருந்து தமிழகம் வந்த மூவருக்கு தொற்று!

Coimbatore Flights

சிங்கப்பூரில் இருந்து கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தமிழகம் வந்த மூவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு குறைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் இந்த சூழலில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா, விமான பயணிகளை சற்று அச்சத்தில் ஆழ்த்துகிறது என்று கூறினால் அது மிகையாகாது.

பெண் ஒருவரை ஏமாற்றி பலே திட்டம்… தமிழக ஆடவர் மற்றும் அவரின் குடும்பத்தார் மீது வழக்கு பதிவு!

அவர்களோடு மட்டுமல்லாமல், அமெரிக்காவில் இருந்து வந்த 2 விமான பயணிகளுக்கும் தமிழகத்தில் தொற்று கண்டறியப்பட்டது.

குரங்கு அம்மை, தக்காளி காய்ச்சல் என வகை வகையான நோய்கள் பரவிவரும் இந்த சூழலில் கொரோனா மீண்டும் தலைதூக்க கூடாது என்ற எண்ணம் அனைவரிடத்திலும் உள்ளது.

தேவையான இடங்களில் முகக்கவசம் அணிவது, அதே போல பொது இடங்களில் தனி மனித இடைவெளி போன்றவற்றை கடைபிடிப்பதன் மூலம் எந்த வகையான நோய்களும் நம்மை நெருங்காமல் பாதுகாக்க முடியும்.

தொற்று நம்மை விட்டு போய் விட்டது என்று நினைப்பவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக பொது நலன் கருதி இந்த பதிவு.

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 3 ஊழியர்கள் மரணம் – குடும்பத்தை எண்ணி பாதுகாப்புடன் இருக்க வேண்டுகோள்!