“நமது ஆகப் பெரிய தெற்காசிய சமூகம், தமிழர் சமூகம்” – பிரதமர் லீ தமிழ் புத்தாண்டு வாழ்த்து..!

Tamil New Year wishes from PM Lee Hsien Loong
Tamil New Year wishes from PM Lee Hsien Loong (Photo from Tamil harvest festival celebration at Bukit Panjang)

சிங்கப்பூரில் COVID-19 முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் நடப்பில் இருக்கும் இந்த வேளையில், தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை பிரதமர் திரு. லீ சியன் லூங் அவர்கள் பகிர்ந்து கொண்டார்.

மேலும், நமது ஆகப் பெரிய தெற்காசிய சமூகம், தமிழர் சமூகம் என்றும், சிங்கப்பூரில் கொண்டாட்டங்கள் நடைபெற முடியாவிட்டாலும், நம் ஒற்றுமை மேலோங்கி இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : COVID-19: 10 சிங்கப்பூரர்களில் ஒன்பது பேருக்கு தலா $600 செலுத்தப்படும்..!

பிரதமர் திரு. லீ அவர்கள் முகநூலில் கூறியதாவது: “தெற்காசிய சமூகங்கள் பல, சிங்கப்பூரில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன. நமது ஆகப் பெரிய தெற்காசிய சமூகம், தமிழர் சமூகம். அவர்களுடன், வளமான மலையாள, சீக்கிய, வங்காள சமூகங்களும் உள்ளன. சீக்கியர்கள் வைசாக்கியைக் கொண்டாடுகின்றனர். மற்ற சமூகத்தினர் இன்றும் நாளையும், தத்தம் புத்தாண்டுகளை அனுசரிப்பார்கள்” என்றார்.

The different South Asian ethnic communities all have long histories in Singapore. Tamils form the largest group, but we…

Posted by Lee Hsien Loong on Sunday, April 12, 2020

“கொவிட்-19 நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் நடப்பில் இருக்கும் வேளையில், கொண்டாட்டங்கள் நடைபெற முடியாவிட்டாலும், நமது ஒற்றுமை உணர்வு மேலோங்கியிருக்கிறது. அனைத்து இனங்களைச் சேர்ந்த சிங்கப்பூரர்களும் தத்தம் வழிகளில் அதனை வெளிப்படுத்துகிறார்கள்.”

மேலும், “அனைத்து, சீக்கியர்களுக்கும் வைசாக்கி தின வாழ்த்துகள், மலையாளிகளுக்கு விஷு தின வாழ்த்துகள், வங்காளிகளுக்கு பொஹெலா பொய்ஷாக் தின வாழ்த்துகள் மற்றும் தமிழர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்” என்று தனது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.

இதையும் படிங்க : விதிமுறை மீறல்: ஒருவரின் வேலை அனுமதி ரத்து – மேலும் 39 வெளிநாட்டு ஊழியர்களுக்கு அபராதம்..!