COVID-19: 10 சிங்கப்பூரர்களில் ஒன்பது பேருக்கு தலா $600 செலுத்தப்படும்..!

Coronavirus: Nine in 10 Singaporeans to get $600 Solidarity Payment
Coronavirus: Nine in 10 Singaporeans to get $600 Solidarity Payment

கொரோனா தொற்று சூழலில், குடும்பங்கள் உதவும் நோக்கில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 10 சிங்கப்பூரர்களில் ஒன்பது பேருக்கு தலா $600 செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் அறிவித்த ஒற்றுமைக்கான வரவுசெலவுத் திட்டத்தில், அனைத்து சிங்கப்பூரர்களின் வங்கிக் கணக்குகளுக்கும் நேரடியாக வரவு வைக்கப்படும், என்றார்.

இதையும் படிங்க : விதிமுறை மீறல்: ஒருவரின் வேலை அனுமதி ரத்து – மேலும் 39 வெளிநாட்டு ஊழியர்களுக்கு அபராதம்..!

2018ஆம் ஆண்டில் SG போனஸ் உட்பட, முன்னர் பணம் பெற்றவர்களில் சுமார் 90 சதவீதம் பேரின் வங்கி கணக்கு விவரங்களை அரசு பெற்றுள்ளதாக நிதி அமைச்சகம் (MOF) நேற்று தெரிவித்துள்ளது.

மேலும் மீதமுள்ள 10 சதவீத சிங்கப்பூரர்கள், தங்கள் வங்கி கணக்கு விவரங்களை இணையம் வழி பாதுகாப்பான அரசு படிவம் மூலம் ஏப்ரல் 23-க்கு முன் வழங்குமாறு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

அதாவது, ஏப்ரல் 23ஆம் தேதிக்கு முன் தங்கள் வங்கி கணக்கு விவரங்களை பூர்த்தி செய்வோருக்கு, ஏப்ரல் 28ஆம் தேதி அவர்களின் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தப்படுவதை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 23க்கு முன் தங்களின் விவரங்களை வழங்காத சிங்கப்பூரர்களுக்கு, ஏப்ரல் 30 முதல் அவர்களின் NRIC-பதிவு செய்யப்பட்ட முகவரிகளுக்கு காசோலைகள் மூலம் பணம் அனுப்பிவைக்கப்படும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 233 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

தகுதிபெறும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளும், Long-Term Visit Pass-Plus எனப்படும் நீண்டகால அனுமதியில் இருப்போரும், ஒரு முறை வழங்கு தொகையாக $300 பெறுவர். மேலும் நிரந்தரவாசிகள் தங்களது SingPass கணக்குகளைக் கொண்டு அதற்கு பதிந்துகொள்ளலாம்.

இப்போதிலிருந்து அடுத்த மாதம் 10ஆம் தேதிக்குள் அவர்கள் அதற்கு விண்ணப்பிக்கலாம். வங்கிக் கணக்கு விவரங்களைப் பதிவுசெய்தோர் அடுத்த மாதம் 19ஆம் தேதிக்குள் பணத்தைப் பெற்றுக்கொள்வர்.

அவ்வாறு செய்யாதவர்களுக்கும் நீண்ட கால அனுமதி அட்டை வைத்திருப்போருக்கும் மே மாத இறுதியிலிருந்து அந்தப் பணம் காசோலையாக அனுப்பப்படும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் இரண்டு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு..!

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #Tamilnews #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil