சிங்கப்பூரில் விதவிதமான தமிழ் பாரம்பரிய உணவுகளைச் சுவைக்க ஒரு வாய்ப்பு!

Photo: LISHA Official Facebook Page

தமிழ் புத்தாண்டையொட்டி, சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்திய கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமை நிலையம் எனப்படும் ‘லிஷா’ (‘Little India Shopkeepers And Heritage Association’- Lisha) மற்றும் இந்திய மரபுடைமை நிலையம் (Indian Heritage Centre- ‘IHC’) ஆகியவை இணைந்து தமிழ் கலாச்சாரம், பாரம்பரியத்தை இன்றைய தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை செய்துள்ளது.

Photo: LISHA Official Facebook Page

திருச்சி விமான நிலையத்தில் 929 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்!

அந்த வகையில், தமிழ் பாரம்பரிய உணவுகளை சிங்கப்பூர் வாழ் தமிழர்கள், ஊழியர்கள் மட்டுமின்றி, சிங்கப்பூரர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் அருந்தும் வகையில், ‘லிஷா’ தமிழ் பாரம்பரிய உணவுத் திருவிழாவிற்கு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி, லிட்டில் இந்தியாவில் உள்ள காயத்ரி உணவகம், சிவம் உணவகம், நாகர்கோயில் ஆரியபவன், ஜூனியர் குப்பண்ணா உள்ளிட்ட உணவகங்களில் பூரி, மசால், ஹைதராபாத் பிரியாணி, பணையாரம் ஆகிய விதவிதமான தமிழ் பாரம்பரிய உணவுகளை சுவைத்து மகிழலாம்.

ஏப்ரல் 8, 15, 29 ஆகிய தேதிகளில் மட்டும் இந்த உணவகங்களில் தமிழ் பாரம்பரிய உணவுகள் கிடைக்கும். தமிழ் பாரம்பரிய உணவுகளை ருசிக்க விரும்புபவர்கள் https://iny.sg/Events/2023/Indian-Ethnic-Food-Trails/Register என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட சுயவிவரங்களைப் பதிவு செய்து, 10 வெள்ளியை கட்டணமாக செலுத்திப் பதிவு செய்துக் கொள்ளலாம்.

காவல்துறையினரிடம் பொய் சொன்ன இந்திய ஊழியருக்கு சிறைத் தண்டனை!

மேலும், குறிப்பிட்டுள்ள மூன்று நாட்களுக்கு மட்டும் பிற்பகல் 03.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை உணவகங்களில் பாரம்பரிய உணவுகள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo: LISHA official Facebook Page

இதனிடையே, தமிழ் பாரம்பரிய உணவுத் திருவிழா தொடங்கிய முதல் நாளே, சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஆர்வமுடன் தங்களது குடும்பத்துடன் உணவகங்களுக்கு சென்று சைவம் மற்றும் அசைவ பாரம்பரிய உணவுகளை அருந்தி மகிழ்ந்தனர். இது தொடர்பான புகைப்படங்களையும் ‘லிஷா’ தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.