“தமிழ்நாடு- சிங்கப்பூர் இடையே நல்லுறவை கட்டமைப்போம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

Photo: CM MKStalin

 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 24) காலை 10.00 மணிக்கு சிங்கப்பூர் நாட்டின் செம்ப்கார்க் (Sembcorp) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கிம்யின் வாங்க், கேப்பிட்டா லேண்ட் (Capita Land) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சஞ்சீவ் தாஸ்குப்தா, டெமாசெக் (Temasek) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தில்ஹான் பிள்ளை சந்திரசேகரா ஆகியோரைச் சந்தித்து, தமிழகத்தில் தொழில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

சிங்கப்பூரின் 2024 ஆம் ஆண்டின் நீண்ட விடுமுறைகள் வெளியீடு – ஊழியர்கள் என்ஜாய்

அத்துடன், அடுத்தாண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கூட்டத்தில், தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் இ.ஆ.ப., சிங்கப்பூர் நாட்டிற்கான இந்திய தூதர் பெரியசாமி குமரன் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிங்கப்பூரில் முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் ஆலோசனை!

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு- சிங்கப்பூர் இடையே உள்ள வரலாற்று நல்லுறவை மேலும் கட்டமைப்போம். எரிசக்தித்துறை, தொழில் பூங்காக்கள் உள்ளிட்டத் துறைகளில் முதலீடுகளை அதிகரிக்க ஆலோசனை மேற்கொண்டோம். தமிழகத்தில் தொழில் முதலீடுகளை செய்வதற்கு சிங்கப்பூர் நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளனர். முதலீடு செய்வதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வதாக நிறுவனங்கள் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. மீன்பிடி தொழில்துறை, உணவுப் பதப்படுத்தும் துறையில் முதலீடு செய்ய டெமாசெக் நிறுவனம் ஆர்வமாகவுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.