தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த அமைச்சர் கா.சண்முகம்!

தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த அமைச்சர் கா.சண்முகம்!
Photo: TN Govt

 

 

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காவும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் வந்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 25) காலை 10.00 மணிக்கு சிங்கப்பூரின் உள்துறை அமைச்சரும், சட்டத்துறை அமைச்சருமான கா.சண்முகத்தைச் சந்தித்துப் பேசினார். அடுத்தாண்டு சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு அமைச்சர் கா.சண்முகத்துக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

“சிங்கப்பூரின் தந்தை லீ குவானுக்கு மன்னார்க்குடியில் நினைவுச் சின்னம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

அப்போது அமைச்சர் கா.சண்முகம், தமிழக முதலமைச்சரிடம் பேசும் போது, சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு நேரடி விமான சேவையைத் தொடங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசிடம் வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

முதலமைச்சர் முன்னிலையில் தமிழக அரசு- சிங்கப்பூர் நிறுவனங்களிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!

இந்த சந்திப்பின் போது, தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் இ.ஆ.ப. மற்றும் அரசு உயரதிகாரிகள் உடனிருந்தனர்.