தேக்காவில் உள்ள உணவகத்தில் உணவருந்திய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்!

சிங்கப்பூரில் இன்று (06/11/2022) தொடங்கவுள்ள 7-வது ‘World One Health Congress’ மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக, அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் வந்துள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் (Changi International Airport) சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை போர்த்தியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அமைச்சருடன் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் செந்தில்குமார் இ.ஆ.ப. அவர்களும் சிங்கப்பூர் வந்துள்ளார்.

சாங்கி விமான நிலையத்தின் நான்காவது முனையத்திற்கு தனது செயல்பாடுகளை மாற்றும் ‘ஜெட்ஸ்டார் ஏசியா’ நிறுவனம்!

இந்த நிலையில், தேக்காவில் உள்ள உணவகம் ஒன்றிற்கு சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவருந்தினார். பின்னர், உணவகத்தில் இருந்து வெளியே வந்த அமைச்சர், காருக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அவரை தமிழக அமைச்சர் என்று அடையாளம் கண்ட தமிழர்கள், சிங்கப்பூரர்கள் அவருடன் கைக்குலுக்கி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக தமிழகத்தில் நடக்கும் மோசடி – “எல்லாமே பெர்பெக்ட்’ஆ இருந்துச்சி” – ஏமாந்தவர் கண்ணீர்

அதேபோல், அதே உணவகத்தில் தனது குடும்பத்தினருடன் உணவருந்திய சிங்கப்பூரர், பின்னர் அமைச்சரைச் சந்தித்து, “இது என்னுடைய குடும்பம். இவர்களுக்கு தீபாவளி ட்ரீட் கொடுப்பதற்காக, இங்கே வந்தேன். நான் உங்களிடம் ஒன்று கூற வேண்டும். கொரோனா காலத்தில் நீங்கள் சிறப்பாகப் பணியாற்றினீர்கள். அதற்காக, எனது வாழ்த்துகள். உங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்” என்றார்.

அதைத் தொடர்ந்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சருடன், சிங்கப்பூரர் புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தார்.