சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்ட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Photo: Tamilnadu Health Minister Official Twitter Page

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அரசுமுறைப் பயணமாக, சிங்கப்பூர் வந்துள்ளார். அவருடன் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் செந்தில் குமார் இ.ஆ.ப. ஆகியோரும் இங்கு வந்துள்ளனர். சாங்கி விமான நிலையம் வந்த அமைச்சருக்கு பூங்கொத்து மற்றும் பொன்னாடைப் போர்த்தி சிறப்பான வரவேற்பு அளித்தனர் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள்.

சிங்கப்பூரில் அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்!

அதைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் நேற்று (07/11/2022) நடைபெற்ற 7-வது ‘World One Health Congress’ மாநாட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துக் கொண்டார். நவம்பர் 7- ஆம் தேதி முதல் நவம்பர் 11- ஆம் தேதி வரை நடைபெறவுள்ள, இந்த மாநாட்டை சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்த மாநாட்டு தொடக்க விழாவில், சிங்கப்பூரைச் சேர்ந்த அமைச்சர்கள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

சிங்கப்பூரில் கனமழை எச்சரிக்கை: பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம்

பின்னர், சிங்கப்பூரின் மிகப்பெரிய மருத்துவமனையான சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு (Singapore General Hospital) நேரில் சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். மேலும், மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடினார். அத்துடன், மருத்துவமனையில் உள்ள புதிய தொழில்நுட்ப கருவிகள் மற்றும் நோயாளிகளுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மருத்துவமனையில் உள்ள அதிநவீன வசதிகள் உள்ளிட்டவையைப் பார்வையிட்டார்.