திருச்சி, மதுரையில் இருந்து சிங்கப்பூர் செல்வோருக்கு தனிமை!

Madurai airport
(PHOTO: iamrenew)

சிங்கப்பூர்-இந்தியா இடையே தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான பயண ஏற்பாடு (VTL) செய்யப்பட்டுள்ளது.

இந்த VTL திட்டத்தின்கீழ் பயணிப்பவர்களுக்கு தனிமைப்படுத்துதல் கிடையாது என்றும் கூறப்பட்டுள்ளது.

டிசம்பர் முதல் வழக்கமான சர்வதேச விமானங்களுக்கு இந்தியா அனுமதி – சிங்கப்பூருக்கு கட்டுப்பாடு

தற்போது திருச்சி மற்றும் மதுரையில் இருந்து பயணம் மேற்கொள்வோர் அதிக இன்னல்களை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

திருச்சி மற்றும் மதுரையில் இருந்து சிங்கப்பூர் செல்ல விமானங்கள் குறைவாக உள்ளதாக பயணிகளின் மத்தியில் கூறப்படுகிறது.

மேலும், அங்கிருந்து பயணிப்போருக்கு 7 நாட்கள் SHN தனிமை கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில், VTL ஏற்பாடுகளின்கீழ் நவம்பர் 29 முதல் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானம் இயக்கப்பட உள்ளது. இதன்படி பயணிப்பவர்களுக்கு தனிமைப்படுத்துதல் கிடையாது

ஆனால், திருச்சி மற்றும் மதுரையில் இருந்து VTL அல்லாத விமானங்களில் பயணிப்பவர்கள் தனிமை உண்டு, அவர்கள் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுக்கு இணங்க வேண்டும்.

இதனால் சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல பயணிகள் அதிகம் விரும்புகின்றனர், அதன் காரணமாக அந்த வழித்தடத்தில் தேவை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், VTL விமானங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்றும், அதற்கான கட்டணம் அதிகம் என்றும் பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர்.

தள்ளுபடியில் விமான டிக்கெட்டுகளை முன்கூட்டியே வாங்கலாம்.. எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்!!