கடையில் இருந்து திடீரென விழுந்த கண்ணாடி… உடைந்து சிதறியதில் காயமுற்ற ஊழியர்கள்

Tampines spectacle shop glass fall workers injury
Google Maps

தெம்பனீஸில் HDB பிளாக்கில் உள்ள கண்ணாடிக் கடை ஒன்றின் கண்ணாடி திடீரென கீழே விழுந்ததில் ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டது.

அதாவது புதுப்பித்தல் பணியின்போது கண்ணாடியை அகற்றிக்கொண்டிருந்த இரண்டு அல்லது மூன்று ஊழியர்களுக்கு காயம் ஏற்பட்டது.

நண்டு மசாலாவில் சிம் கார்டு ட்ரே பின்… ஒன்னு வாங்குனா ஒன்னு பிரீ – நொந்துபோன ஊழியர்

காயம்பட்ட மீதமுள்ளவர்கள் அந்த வழியாகச் சென்றவர்கள் என்றும் ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

ஜூன் 9 ஆம் தேதி பிற்பகல் 1 மணியளவில் பிளாக் 201E Tampines Street 23 இல் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியுள்ளது.

அதன் பின்னர் அங்குவந்த SCDF வீரர்கள், ஐந்து நபர்களை சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஏன் கண்ணாடி கீழே விழுந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று அந்த கண்ணாடிக் கடையின் உரிமையாளர் கூறியுள்ளார்.

Shin Min Daily News

இருப்பினும், நீண்ட காலமாக பயன்பாட்டில் இருப்பதால் தேய்மானம் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் அவர் கருதினார்.

சம்பவம் நடந்தபோதிலும், சீரமைப்புப் பணிகளைத் நிறுத்தாமல் தொடர்வதாகவும் அவர் பகிர்ந்து கொண்டார்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூரைக் கட்டியெழுப்பியதற்கு உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகை, தள்ளுபடி, குறைந்த விலையில் சேவை – அதிரடி அறிவிப்பு