“இது என்ன உங்க தாத்தா வீட்டு சாலையா?” – சிங்கப்பூரில் இடம்பெற்றுள்ள வித்தியாசமான பதாகைகள்!

Google Street View

சிங்கப்பூரில், தஞ்சோங் ரூ வியூ பகுதியில் வண்ணமயமான அடையாளங்கள் கொண்ட 12 பதாகைகள் பொதுமக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில் ஒரு நீல நிற உயிரினம் வாகன ஓட்டிகளை எச்சரிக்கை செய்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, “பார்க்கிங் கட்டணத்திற்கு ‘ஹலோ’ சொல்ல இங்கே வாகனத்தை நிறுத்துங்கள்” என வேடிக்கையாக வாசகம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது.

சிங்கப்பூரில் குவியும் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் – ICA கூறிய தகவல் என்ன ?

அது மட்டுமில்லை, “இங்க ஏன் வாகனத்தை நிறுத்துறீங்க, இது என்ன ‘உங்க தாத்தாவின் சாலை? யா’: என்றும் வசனங்கள் அடங்கிய ஆங்கில பதாகைகள் அங்கு இடம் பெற்றுள்ளது.

சட்டவிரோத வாகன நிறுத்தத்தைத் தடுக்க, மவுண்ட்பேட்டனில் உள்ள தன்னார்வத் தொண்டர்கள் இந்த பதாகைகளை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தஞ்சோங் ரூ, காலாங் பேசினுக்கு அருகே அமைந்துள்ளது, அந்த பகுதியில் பல வாகனமோட்டிகள் சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்தி வந்த நிலையில், தற்போது இந்த கண்கவர் எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதனால் வாகனமோட்டிகள் சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்தும் பிரச்சனைகள் தற்போது குறைந்ததாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியருக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்… வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரன் – தற்கொலை செய்து கொண்ட மாணவி